1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 மே 2025 (08:33 IST)

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

Supergood Subramani

தமிழ் சினிமாவின் காமெடி குணச்சித்திர நடிகரான சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோயால் காலமானார்.

 

தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் வந்த சூப்பர்குட் சுப்பிரமணி பிரபல இயக்குனர்களான சரவண சுப்பையா, பவித்ரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் இயக்குநராகும் அவரது கனவு நிறைவேறாவிட்டாலும், படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

 

முண்டாசுப்பட்டி படத்தில் இவர் நடித்தது இவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், பரியேறும் பெருமாள், ஜெய்பீம், கூர்கா என பல தமிழ் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்தார். 

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சுப்பிரமணிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் புற்றுநோய் அபாயக் கட்டத்தை எட்டியதால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K