1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 மே 2025 (13:17 IST)

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence

சிவகங்கையில் சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்துவிட்டதாக வேதனைப்பட்ட தம்பதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

 

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது பிரபலமான நடிகராக உயர்ந்துள்ளவர் ராகவா லாரன்ஸ். நடிப்பை தாண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் பலருக்கும் கல்வி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ், ஏழை எளிய மக்களுக்கும் ஆட்டோ வாங்கி கொடுத்தல் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.

 

சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த குமார், அவரது முத்துக்கருப்பி இருவரும் தங்கள் குழந்தைகளின் காதணி விழாவிற்காக பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த பணம் கரையான் அரித்ததால் அவர்களால் காதணி விழா நடத்த முடியாமல் போனது.

 

இந்த செய்தியறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை அழைத்து ரூ.1 லட்ச ரூபாயை காதணி விழாவிற்காக கொடுத்து உதவியுள்ளார். அவரது இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K