போட்டி முடிந்ததும் கோப்பையை எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. மைதானத்தில் பதற்றம்..!
நேற்று நடந்த ஆசியகோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் போட்டி முடிந்த பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரிசளிப்பு விழா தாமதமானது.
பாகிஸ்தான் அமைச்சர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட எட்டு முக்கிய பிரமுகர்கள் இந்திய வீரர்கள் வருவார்கள் என்று மேடையில் காத்திருந்தனர்.
ஆனால், இந்திய அணி கோப்பையை மொஹ்சின் நக்வி வாங்க மறுத்துவிட்டது என்று தெரிந்தவுடன்,மொஹ்சின் நக்வி மேடையிலிருந்து கோப்பையையும், பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு தனது ஹோட்டல் அறைக்கு சென்றதாக தெரிகிறது.
நாங்கள் வெற்றி பெற்ற கோப்பையையும், பதக்கங்களையும் மொஹ்சின் நக்வி எடுத்துக்கொண்டு, தனது ஹோட்டல் அறைக்கு செல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் விளையாட்டுத் தன்மைக்கு விரோதமான செயல்" என்று இந்திய அணி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி ஆகா, இந்தியாவின் செயலை கடுமையாக விமர்சித்தார். "இந்தியா எங்களுடன் கை குலுக்க மறுத்ததும், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததும், எங்களை மட்டும் அவமதிக்கவில்லை, கிரிக்கெட் விளையாட்டையும் அவமதிக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம், கிரிக்கெட் களத்திலும் எதிரொலித்தால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Edited by Siva