ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறார் அபிஷேக் ஷர்மா. முதல் பந்தில் இருந்தே முதலே பவுண்டரிகளை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா. ஐபில் மூலம் கவனம் ஈர்த்த அபிஷேக் இந்திய அணியில் இடம்பிடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பான, தரமான இன்னிங்ஸ்களை அவர் ஆடினார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
சீரான ஆட்டத்தால் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அவர் தற்போது புதிய உச்சத்தையும் எட்டியுள்ளார். டி 20 போட்டிகளில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 931 புள்ளிகள் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் டேவிட் மலான் -919, சூர்யகுமார் யாதவ் -912 புள்ளிகள், விராட் கோலி- 907 புள்ளிகள் பெற்றதே உச்சமாக இருந்தது.