வெள்ளி, 3 அக்டோபர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2025 (13:54 IST)

இந்திய அணி அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்து திணறும் மேற்கிந்திய தீவுகள்..!

இந்திய அணி அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்து திணறும் மேற்கிந்திய தீவுகள்..!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சு காரணமாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தில் தடுமாறி வருகிறது.
 
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால், அவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஐந்து ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பிறகு, அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன.
 
சற்றுமுன் வரை, மேற்கிந்தியத் தீவுகள் அணி 44 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக, கிரீஸ் மட்டுமே 32 ரன்கள் அடித்தார். இவரை தொடர்ந்து, ஹோப் 26 ரன்களும், கேப்டன் ரோஸ்டன் 24 ரன்களும் எடுத்தனர்.
 
இந்தியத் தரப்பில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Mahendran