1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 மே 2025 (12:19 IST)

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் இந்துக்கள் என உறுதி செய்யப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியுடன் போட்டி நடைபெறும் என்பதாக கூறப்படுகிறது.
 
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த காரணத்துக்காகவே போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போலவே, இந்தியா – வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் தொடரும் தள்ளிவைக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran