ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் இந்த ஆண்டு சீசன் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. எஞ்சிய போட்டிகளை மீண்டும் தொடங்கி நடத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் முடிவுகளை எடுத்து வரும் நிலையில், வெளிநாட்டு வீரர்கள் பலர் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியின் பக்கபலமான பந்துவீச்சாளராக இருந்த ஹெசில்வுட் இனி வரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என வெளியான தகவல் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த ஆர்சிபி கிட்டத்தட்ட ப்ளே ஆப்க்கு முன்னேறியிருந்தது.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக டெல்லி அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால் பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்க்கு வர மாட்டார்கள் என தெரிகிறது. டெல்லி அணியின் வெற்றிகளில் மிட்செல் ஸ்டார்க்கின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
இவ்வாறு முக்கிய வீரர்களின் விலகலால் மீதமுள்ள போட்டிகளில் அணிகளின் வெற்றி, தோல்வி பெறும் ஏற்ற இறக்கங்களை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K