1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 12 மே 2025 (10:50 IST)

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

காஷ்மீரின் பஹல்ஹாமில்  கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்திய ராணுவம் பதிலடிக் கொடுத்தது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ராணுவங்களும் எல்லைப் பகுதிகளில் மோதிக் கொண்டன. இதனால் கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவியது.

இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த சம்மதித்த நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்த வார இறுதியில் மீண்டும் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் தென்னிந்தியாவில் மட்டுமே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.