1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 மே 2025 (15:07 IST)

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

போர் விமானங்களை சாலையில் இறக்கி இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், போர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை சாலைகளில் இறக்கி ஒத்திகைகளில் ஈடுபட்ட சம்பவம் பாகிஸ்தானை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விரைவு சாலையில், அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகை இன்று நடைபெற்றது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
 
இதனால், எந்த நேரத்திலும் போர் விமானங்கள் பாகிஸ்தானை தாக்கும் என்று கூறப்படுவதால், இரு நாடுகள் எல்லைகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
 
Edited by Mahendran