1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (11:31 IST)

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் புகுந்தது ஏன்? - ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்!

EPS ambulance

வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார்.

 

தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கூட்டத்திற்குள் புகுந்து ஒரு ஆம்புலன்ஸ் அலார சத்தத்துடன் பயணித்தது.

 

இதனால் அப்செட் ஆன எடப்பாடி பழனிசாமி, திமுக தனது பிரச்சார கூட்டத்தில் இடையூறு செய்வதற்காக இதுபோல ஆம்புலன்ஸ்களை அனுப்புவதாகவும், அடுத்த முறை இந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தால், அதன் டிரைவரே அந்த ஆம்புலன்ஸில் நோயாளியாக செல்ல வேண்டி வரும் என எச்சரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார ஏரியாவுக்குள் புகுந்தது குறித்து பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவே அவ்வழியாக சென்றதாக விளக்கம் அளித்துள்ளார். 

 

எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K