1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (11:18 IST)

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

திமுகவின் ஆட்சியில் ஏற்படும் பிரச்சினைகளில் திருமாவளவன் அமைதி காத்து வருவதாகவும், நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவ்வாறாக திருவண்ணாமலையில் மக்களிடையே பேசிய அவர் “அதிமுக ஆட்சியில் இருந்தபோது தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்திருக்கிறது.
 

திமுகவின் செயல்களுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார். திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம். கள்ளச்சாரயம் அருந்தி 68 பேர் இறந்தபோது நான் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆதரவு கூறினேன். அப்போது மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக திருமாவளவன் அறிவித்தார். பின்பு திமுக கொடுத்த நெருக்கடியால் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு என பெயர் மாற்றினார். பாவம் திருமாவளவன். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K