1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2025 (11:08 IST)

தவெக பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி! - ஸ்ரீவில்லிபுத்தூரில் சோகம்!

TVK follower died

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேனர் வைத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஏராளமான தவெகவினர் தயாராகி வருகின்றனர். தெற்கு மாவட்ட தவெகவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ள நிலையில் மதுரை மாநாட்டிற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் என பல பகுதிகளிலும் தவெகவினர் பேனர் வைத்து வருகின்றனர்.

 

அவ்வாறாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் தவெக பேனர் வைக்கும் பணியில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் காளீஸ்வரன் என்பவர் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக பலியானார். நாளை மாநாடு நடக்க உள்ள நிலையில் இன்று தவெக தொண்டரும், கல்லூரி மாணவருமான காளீஸ்வரன் பலியாகியுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K