1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2025 (11:18 IST)

திமுகவில் இணைகிறாரா நடிகர் சூர்யா? விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுவாரா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தி.மு.க.வுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நடிகர் சூர்யாவை தி.மு.க. களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சூர்யா, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். குறிப்பாக, அ.தி.மு.க. ஆட்சியில் அரசுக்கு எதிராக பல கருத்துகளை பதிவு செய்த அவர், தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு எதிர்மறையான கருத்தையும் பதிவு செய்யவில்லை. இதனால், அவரது திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சூழ்நிலையில், விஜய்க்கு எதிராக சூர்யாவை அரசியலில் இறக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவும், அவர் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இரு நடிகர்களுக்கு இடையே அரசியல் மோதல் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran