சனி, 27 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2025 (14:59 IST)

விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்துள்ளனர்: விஜய பிரபாகரன்

விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்துள்ளனர்: விஜய பிரபாகரன்
தே.மு.தி.க.வின் 21-வது தொடக்க விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பிரமுகர் விஜய பிரபாகரன், விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்தனர் என ஆவேசமாக பேசினார்.
 
"இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றாலும், 'அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிக் கற்போம்' என்று அவர் கூறியிருந்தார்" என விஜய பிரபாகரன் தெரிவித்தார். தமிழகத்தில் நெசவாளர்கள் தொழில் பாதிக்கப்பட்டபோது, அனைத்துக் கட்சிகளும் கஞ்சி ஊற்றிய நிலையில், விஜயகாந்த் மட்டுமே நெசவாளர்களுக்கு சேலைகளை வாங்கி கொடுத்து உதவினார் என்றும் அவர் கூறினார்.
 
மேலும், விஜய பிரபாகரன் பேசுகையில், "தமிழகத்தின் ஒரே பெண் தலைவர் பிரேமலதா மட்டும்தான். அவருக்குப் பெண்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 
 
இன்று புதிதாகக் கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லோருமே விஜயகாந்தை பார்த்துதான் ஆரம்பிக்கின்றனர். சீமான், விஜய் போன்றவர்களும் விஜயகாந்தை பார்த்துத்தான் கட்சி ஆரம்பித்தனர்" என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran