முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...
தவெக ஆட்சியில் சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர் வன்னியரசு. சமீபத்தில் முதுமலை வனப்பகுதிக்கு சென்று அங்கு அவர் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. புலிகளை துரத்தும் சில வீடியோக்களை வன்னியரசு தனது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.
அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, அங்கு யாருக்கும் அனுமதி இல்லை.. அப்படி இருக்கும் போது அமைச்சருக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இதற்காக முறையாக அனுமதி வாங்கப்பட்டதா? என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.. சிலர் புலிகள் காப்பகத்தில் புகாரும் அளித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த வன்னியரசு 15 வருடங்களுக்கு மேல் நான் காடுகளுக்கு சென்று வருகிறேன்.. தமிழகத்தில் உள்ள பல காடுகளுக்கும் நான் சென்றுள்ளேன்.. மலையேற்றம் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.. தீபாவளிக்கு கூட நான் வீட்டில் இருக்கமாட்டேன்.. காடுகளில்தான் இருப்பேன்.. என்னால் விலங்குகளுக்கு தீங்கு வராது நான் மக்களை மட்டுமல்ல.. விலங்குகள், காடுகள், கடலையும் நேசிக்கிறேன்.. முறையாக அனுமதி பெற்றுதான் முதுமலை வனப்பகுதிக்கு சென்றேன் என அவர் கூறியிருக்கிறார்.