கோவில்களில் விஐபிக்களின் தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்!.. அமைச்சர் ரமேஷ் கறார்!..
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின் பல அதிரடியான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதுவும் அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் நியமிக்கப்பட்டார். அப்போது முதலே அடிக்கடி அவர் பல கோயில்களுக்கும் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்.
அப்படி திருச்செந்தூரில் அவர் ஆய்வு செய்தபோது சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறிய அவரிடமே சிலர் பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சிலரின் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கோவில்களில் விஐபிகள் தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் விஐபிக்கள் வருகை குறித்து ஒரு நாட்களுக்கு முன்பாகவே கோயில் ஆணையருக்கு விவரங்களை வழங்க வேண்டும்.
கோவில் வளாகத்தில் விஐபிக்கள், பிரபலங்கள் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு அனுமதி இல்லை..
கோவில்களில் தெய்வ சிலைகள், கருவறைகளை போட்டோ வீடியோ எடுக்கவும் டைல்ஸ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது..
முக்கியமான கோவில்களில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன் முழுவதுமாக தடை செய்யப்படுகிறது..
அடுத்த 20 நாட்களுக்குள் கோயில்களில் மொபைல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது என அவர் கூறினார்.