இந்தியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி ரயில் பாதை திட்டம்?!..
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல வருடங்களாகவே நல்லுறவு
நீடித்து வருகிறது. ரஷ்யாவோடு பல வர்த்தகங்களையும் இந்தியா செய்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து நிறைய கச்சா எண்ணெய்களை இந்தியா வாங்குகிறது.
இது பிடிக்காமல்தான் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 100 சதவீத வரியை விதிக்கும் மசோதாவை அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில்தான், இந்தியாவுடன் நேரடி ரயில் பாதை அமைக்க ரஷ்யா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டுவரமுடியவில்லை.
அதனால், மத்திய ஆசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக ரயில் இணைப்பை அமைக்க பரிசீலித்து வருவதாக ரஷ்ய துணை பிரதமர் மராட் குஸ்னுலின் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இந்தியாவிற்கு மாற்று வர்த்தக வழித்தடங்களை மாஸ்கோ தேடி வரும் நிலையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.