சீன் போட நினைச்சி அவமானம்தான் மிச்சம்!.. விஜயை விளாசும் முன்னாள் சபாநாயகர்!..
தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனவே ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்று வருகிறது. ஆனால் தற்போது தவெக ஆட்சி அமைந்து ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அதிமுக, திமுக போல நாம் சண்டை போட வேண்டாம்.. பேசி தீர்த்துகொள்வோம் என முடிவெடுத்த விஜய் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச முடிவெடுத்தார்.
எனவே வருகிற 3ம் தேதி இதற்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒருபக்கம் மு.க ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பேச்சு வார்த்தையால் தண்ணீரை கொண்டுவர முடியாது என கூறி வருகிறார்கள்.
மேலும் கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் விஜய் இங்கே வர வேண்டாம்.. இன்னொரு தேர்தல் சந்திப்போம் என டிகே சிவக்குமார் அறிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு குறித்த காலத்தில் காவிரி நீரை பெற அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை வைத்தும் அதனை மதிக்காமல் ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே சிஎம் சார்!.. இரண்டு மாதத்திற்கு முன்னரே உச்சநீதிமன்றம் சென்று காவிரி நீரை பெறுவதற்கு பதிலாக நானே கர்நாடக முதல்வரை சந்தித்து தண்ணீரை கொண்டு வருவேன் என்ற அகந்தையால் நீங்கள் அவமானப்பட்டதோடு தமிழகத்தையும் அவமானப்படுத்தி விட்டீர்களே சிஎம் சார் என குறிப்பிட்டுள்ளார்.