எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யமட்டேன்!.. முரண்டு பிடிக்கும் ஓபிஎஸ்!...
2026 சட்டமன்றத் தேர்தலில் ஜோசப் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது.
அதேபோல் இதுவரை அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். அதேபோல், அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையப்போகிறார் என்கிற செய்தி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் தவெகவில் இணையும் முடிவில் இருக்கிறார். ஆனால், இது தொடர்பாக அவர் பனையூர அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை என சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் உங்கள் அப்பாவையும் நீங்கள் அழைத்து வருவதாக இருந்தால் இது பற்றி பேசுவோம் என தவெக தரப்பு சொல்லிவிட்டதாம்.
ஆனால், தனது பதவியை ராஜினாமா செய்ய ஓ.பன்னீர் செல்வம் தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. எனவே, அவருக்கும் அவரின் மகனுக்கும் இடையே பிரச்சனை எழுந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.