1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan says its completely dmk mistake

விஜயை ஸ்டாலின் ஒரு தலைவராகவே பார்க்கல!. அதான் பிரச்சனை!.. திருமாவளன் பேச்சு..

thirumavalavan
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார். ஆட்சி அமைக்க மேலும் 108 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் தற்போது ஆட்சி அமைந்திருக்கிறது.
ஆதரவு கொடுத்ததற்காக கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகளுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறது..

விடுதலைச் சிறுத்தை கட்சியை பொறுத்தவரை அக்கட்சியின் எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருமாவளவன் தான் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை சரியாக சொல்லாமல் மாறி மாறி பேசி வருகிறார். சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய திருமாவளவன் ‘கரூர் சம்பவம் நடைபெற்ற போது நான் விஜயை கைது செய்யுமாறு முக ஸ்டாலினிடம் கூறினேன்.. ஆனால் அவர்கள் யோசித்தார்கள்.. விஜயின் தவறை அம்பலப்படுத்தி இருந்தால் திமுக தோல்வி அடைந்திருக்காது’ என்று பேசி தவெகவினரின் கோபத்தை பெற்றார்..

இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் பேசிய திருமாவளவன் ‘விஜயை ஒரு அரசியல் தலைவராக ஸ்டாலின் கருதவில்லை. பாஜகவையும் அதிமுகவையும் விமர்சிப்பதிலேயே அவர்கள் கூறியாக இருந்தார்கள். அந்த சமயத்தில் நான் விஜய்யும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்று விமர்சித்தேன்.. அதை வைத்துக்கொண்டு ‘அன்று அப்படி சொல்லிவிட்டு இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்?’ என்று என்னை கேட்கிறார்கள்..

முதலமைச்சர் விஜயும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார்கள்.. இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள் அமைச்சர் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள்.. ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.. எனக்கு அதில் சிறிதும் உடன்பாடு இல்லை’ என அவர் பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
1989-ஆம் ஆண்டு முதல் தீராத சொத்து பிரச்சனை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புகார் அளித்த பள்ளித்தோழர்...