நான் Sorry சொல்றேன்.. ஆனா நீங்க திருந்துங்க!.. திமுக எம்.பி. ஆ.ராசா கோபம்!..
சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதாக திமுகவினர் தம்மட்டம் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அப்போது என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.. என சொல்லி அவர் காட்டிய உடல்மொழி திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், சட்டசபையில் பேசிய அமைச்சர் சிடி நிர்மல் குமார் மிசா காலத்தில் கொலை, வழிப்பறி, கொள்ளை, பெண்கள் தொடர்பான வழக்குகள் என பல வழக்குககளில் பலரும் கைது செய்யப்பட்டனர்.. ஆனால், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை என கூறினார். இது திமுகவினரை கொந்தளிக்க வைத்தது.
எனவே, முதல்வர் விஜய் மற்றும் சி.டி நிர்மல் குமார் ஆகியோரின் பேசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்று கண்டன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பலரும் தவெகவையும், முதல்வர் விஜயையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.
சென்னை கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற ஒரு முதல்வர் வந்துள்ளார். நீ கை காட்டி ஆக்சன் செய்வதற்கா சட்டசபை?.. அதற்குதான் உனக்கு 250 கோடி சம்பளம் கொடுத்தாங்களே. நீ ஏன் அரசியலுக்கு வந்த?.. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என ஒருவர் பேசுகிறார்... அவர் யாருக்கு பிறந்தார் என சந்தேகம் வருகிறது என்று பேசினார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சை பலரும் கண்டித்த நிலையில் ஆ.ராசா வெளியிட்ட அறிக்கையில் தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை, உண்மையை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பொய் என்று கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்த ஏளனம் செய்வதரின் அடையாளத்தை, உண்மையை உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கு வருத்தம்தான்.. என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்கு தயக்கமில்லை.. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என தெரிவித்திருக்கிறார்.