வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (18:45 IST)

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது போக போகத்தான் தெரியும். -தவெக மாநாடு குறித்து சீமான் பதில்!

திண்டுக்கல், தேனியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் மருது பாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறுகையில்:
 
தவெக மாநாட்டில் தமிழ் மன்னர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட் குறித்த கேள்விக்கு:
 
அதையெல்லாம் எடுத்துவிட்டு பின்னர் மராட்டியர்கள் படத்தையா  வைக்க வேண்டும், நான் வரவேற்கிறேன் இதைத்தானே வைக்க வேண்டும் நான் வைக்கும் போது என்னிடம் யாரும் கேட்கவில்லை. பெருமைமிகு முன்னோர்கள் இருக்கிறார்கள் அரசியல் தலைமைகள் உள்ளனர். அதை செய்யும்போது பெருமைதான்.
 
விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு:
 
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது போக போகத்தான் தெரியும் நீங்கள் பெரியாருக்கு மாலை போடும் போது அதை சொல்லவில்லையே. அது அவரது கடமை நான் சேர, சோழ, பாண்டியர் பரம்பரையில் வந்தவன் நான் என் முன்னோரை போற்ற வேண்டும். சுபாஷ் சந்திர போஸுக்கு இங்கே பெயரோ, சிலையோ இல்லாமல் இருக்கிறதா அதை கொண்டு வந்தவர் எங்க தாத்தா முத்துராமலிங்க தேவர் ஆனால் மேற்கு வங்கத்திலோ, வட இந்தியாவிலும் அவருக்கு பெயரோ, சிலையோ உண்டா நீங்கள் சொல்லுங்கள் அப்ப நாங்க சுதந்திரத்துக்கு போராடாமல் வேற எதுக்கு போராடினோமா, எதுக்கு நாங்கள் நிராகரிக்கப்பட்டோமோ அங்கே எழுந்து நிற்க வேண்டும் அதற்கு அவசியம் இருக்கு, அதான் இது அதை செய்ய வேண்டும். 
 
மதுரையில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது பொதுமக்கள் அவதி குறித்த கேள்விக்கு:
 
நான் சொல்லியா மழை பெய்தது, தம்பி இத நீங்க என்கிட்ட கேட்க கூடாது என்கிட்ட கேட்டு என்ன ஆகப்போகுது. முதல்வரிடம் வலியுறுத்தி என்ன ஆகப்போகுது, நேற்று கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தால் சரி, நீங்கள் எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்கிறீர்கள். ஐந்து முறை, ஆறு முறை ஆண்டு விட்டீர்கள் 60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எங்கள மாதிரி ஆளுங்க கிட்ட ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.
 
முதன்மையான நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு இல்லை* மாநகராட்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் நீர் வடிந்து ஓரிடத்தில் சேமிப்பதற்கு ஒரு திட்டம் இந்த நாட்டில் உள்ளதா? ஒரு நாள் மழைக்கு இந்த நிலைமையினால் தொடர்ச்சியாக மூன்று நாள் மழை பெய்தால் என்ன செய்வீர்கள்.
கேட்டால் நல்லாட்சி என்பீர்கள். நீங்கள் சென்னைக்கு வந்து பாருங்கள் நல்ல வேலையாக தப்பிச்சோம் என்று சொல்ல முடியாது, நாங்களெல்லாம் பரிசல் துடுப்பு எல்லாம் வாங்கி வைத்திருந்தோம். தப்பித்து கரைக்கு போவதற்காக அவ்வளவு தூரம் தண்ணீர் தேங்கி இருந்தது.
 
துணை முதல்வர் களத்தில் இறங்கி பணியாற்றியது குறித்த கேள்விக்கு:
 
அவங்க அப்பாவும் துணை முதல்வராக இருந்தபோது களத்தில் இறங்கி பணியாற்றினார். 4000 கோடி ஒதுக்கி 90 சதவீதம் கட்டமைப்பை முடித்து விட்டோம் என்று சொல்கிறீர்கள். அப்போது 1800 விசை இயந்திரங்கள் தேவையில்லை, நீரை இறைத்து ஊத்த அப்படி என்றால் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்யவில்லை அப்படித்தானே? ஒன்னு அதைச் செய்யணும் இல்லை இதைச் செய்யணும் தம்பி வேலை செய்யறது வேற வேலை செய்கிற மாதிரி நடிக்கிறது என்பது வேற, கடமையை செய்வது வேற, ஒரு கடமைக்கு செய்யறது வேற, வேறுபாடு புரிகிறதா என கூறினார்.