1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 மே 2025 (18:46 IST)

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, இன்று  இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக வீழ்ந்தது.
 
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கைகள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் நடந்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டம் அதிகரித்துள்ளது.
 
இதன் தாக்கம் அந்நிய செலாவணி சந்தையிலும் தெரிந்தது. வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் இந்திய ரூபாய் இன்று 84.65 என்ற அளவில் தொடங்கியது. வர்த்தகத்தின் போது 84.47 என்ற உயரத்தையும், 84.93 என்ற தாழ்வையும் தொடந்தது. இறுதியில், 45 காசுகள் வீழ்ச்சியுடன் ரூ.84.80 என்ற நிலையில் முடிந்தது.
 
நேற்று  இந்திய ரூபாய் 5 காசுகள் குறைந்து ரூ.84.35 ஆக இருந்தது. ஆனால் இன்று ஏற்பட்ட இழப்பு அதிகமாக உள்ளது என்று நாணய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலை தொடர்ந்தால் இறக்குமதி செலவுகள் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Mahendran