இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்: டங்ஸ்டன் சுரங்கம் குறித்து தனி தீர்மானம்..!
தமிழ்நாடு சட்டசபை இன்று காலை கூட இருக்கிறது. இன்றைய தினம் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் உரிமை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு கூடுகிறது. முதல் கட்டமாக, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதன் பின்னர், தொழிலதிபர் ரத்தன் டாட்டா உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் ஏலங்கள் மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். அதோடு மேலும் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மீதான கேள்வி நேரம் நாளை நடைபெறும் என கூறப்படுகிறது.
Edited by Siva