பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...
அதிமுகவில் ஏற்கனவே ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பின் செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, கடந்த 27ம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்று அங்கு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். அதை முடித்துவிட்டு அவர் கோவை விமான நிலையம் வந்தபோது அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பும் கொடுத்தார்கள்.
தவெகெவில் இணைந்தபின் செய்தியாளிடம் பேசிய செங்கோட்டையன் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.. பலரும் வருவார்கள் என கொளுத்தி போட்டார்
. அதைத்தொடர்ந்து நேற்று கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் போட்ட பழனிச்சாமி செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.
செங்கோட்டையனுக்கு பதவி, அடையாளம் கொடுத்தது எல்லாமே அதிமுக. ஆனால் இன்று மாற்றுக் கட்சியில் இணைந்திருக்கிறார். வாக்கு கேட்க வீடு வீடாக சென்றவர் ராஜினாமா செய்த போது மக்களிடம் கேட்டாரா? இப்படிப்பட்டவரா மக்களுக்கு நன்மை செய்யப் போகிறார்? அவருக்கு மக்கள் மீது அக்கறையே இல்லை. அவரை எச்சரித்தும் தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதித்தார். அப்படிப்பட்டவரை எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்?.. யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தோமோ அவர்களுடனே போய் பேசுகிறார்.. அவர் செய்தது துரோகம் என்றெல்லாம் பழனிச்சாமி பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்துக்கு வந்த செங்கோட்டையனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் சொன்ன செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி இப்போது எனக்கு தலைவர் இல்லை. அவர் சொன்ன கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.. யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நான் தெளிவாக இருக்கிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.