அப்படி பாத்தா மொத்த தவெகவும் ஜெயில்லதான் இருக்கணும்!.. சீமான் கோபம்....
சமீபத்தில் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மதுரையை சேர்ந்த யுடியூபர் மீனாட்சி கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மீனாட்சி தவெகவை சேர்ந்தவர் என சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
குறிப்பாக தவெக அரசுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீனாட்சியை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்து தனது யுடியூப் பக்கத்தில் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தவெக நிர்வாகிகள் காவல்துறையில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துணை சபாநாயகர் ரவிசங்கர், எம்எல்ஏ அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு சமூகவலை பதிவுகளுக்காக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு தொடுப்பதா? ஆபாசம், அவதூறு, உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தவெகவ்வினர் மொத்த பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.