1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman comment about vijay is god child

முதல்வர் விஜய் கடவுளின் குழந்தையா?!.. பைத்தியக்காரங்களா!.. சீமான் கோபம்!.

seeman vijay
வழக்கம்போல் இந்த வருடமும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடகா அரசு கூறியுள்ள நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமாரை சந்தித்து பேச தமிழக முதல்வர் விஜய் முடிவெடுத்தார். இதன் காரணமாக அங்கு போராட்டங்கள் வெடித்தது.

இதையடுத்து ‘இப்போதுள்ள சூழ்நிலையில் விஜய் இங்கே வர வேண்டாம்’ என டி.கே சிவகுமார் கூறிவிட்டார். எனவே காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த இரண்டு நாட்களாகவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தற்போது கபினி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.

எனவே, விரைவில் காவிரி நீர் தமிழகத்திற்கு வரவிருக்கிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜயின் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் ‘விதியுடன் போது விஜயுடன் மோதாதே’.. விஜய் கடவுளின் குழந்தை அதனால்தான் கர்நாடகாவில் மழை பெய்து தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிட்டது.. என்றெல்லாம் பதிவிட்டனர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சீமான் ‘விஜய் கர்நாடகாவுக்கு போகணும்னு நினைச்சாரு.. மழை பெஞ்சுடுச்சு..  அவர் கடவுள் குழந்தை.. கர்நாடகாகாரங்க தண்ணீர் திறந்து விட்டாங்க பாரு.. அப்படி எல்லாம் சொல்றீங்க.. ஏன்டா கடவுளின் குழந்த இங்க இருக்கும் போது கர்நாடகா ஏன்டா மழை பெய்யுது? இங்கேயே பெஞ்சிட்டு போக வேண்டியதுதானடா!.. இங்கே மழை பெஞ்சா நாங்களே புடிச்சுக்குறோம்.. அது என்ன கர்நாடகாவில் இருந்து கடவுள் எனக்கு தண்ணீர் திறந்து விடணும்.. பைத்தியக்காரங்களா’ என நக்கலடித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியா வளருதுன்னா ஏன் துபாய்ல இருக்கீங்க?!.. மாதவனை வெளுத்த ராஜ் தாக்கரே!..