திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (07:38 IST)

தீபாவளி அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ.490 பணம்.. வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவதாக அறிவிப்பு..!

குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வரும் நிலையில் அரிசி சர்க்கரைக்கு பதிலாக  குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 490 ரூபாய் பணம் அனுப்பப்படும் என புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது.  

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரைக்கு பதில் ரூபாய் 490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

ரேஷன் கடையில் வழங்கும் அரிசி, சர்க்கரைக்கு பதிலாக பணம் கொடுப்பதால் தாங்கள் விரும்பிய பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் இதே போன்ற குடும்ப  அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva