திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:33 IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 - புதுச்சேரி அரசு அறிவிப்பு

Puducherry
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படு  என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளதாவது:

தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதில் ரூ.490 வழங்கப்படும். 10 கிலோ அரிசி 2 கிலோ சர்க்கரைக்குப் பதில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும்,  3.37 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 490 வழங்க ரூ.16.53 கோடி அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.