திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (18:45 IST)

இடஒதுக்கீடு அளவை 65% ஆக உயர்த்த பீகார் முதல்வர் முடிவு

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட  நிலையில், அதுபற்றிய தகவல் வெளியாகிறது.

இம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் BC (பிற்படுத்தப்பட்டோர் -22.13சதவீதமும்,    EBC  (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) 36.01 சதவீதமும்,   SC (பட்டியலினத்தவர்-19.65  சதவீதமும்,  ST( பழங்குடியினர்)-1.69 சதவீதமும்,  FC- முற்பட்ட பிரிவினர் 15.52 சதவீதமும் உள்ளதாக தகவல்  வெளியிட்டது.

இது 90 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு என கூறப்படுகிறது

இந்த  நிலையில் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதம் உயர்த்த முதல்வர் நிதிஸ்குமார் பரிந்துரை செய்துள்ளார்.

ஜாரிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் குழு விவகரங்களை சட்டப்பேவையில் வெளியிட்டு, பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு அளவை 65% ஆக உயர்த்த முதல்வர் நிதிஸ்குமார் பரிந்துரை செய்துள்ளார்.

தாழ்த்தப்பட்டோருக்கு  20%, பழங்குடியினருக்கு 2%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோருக்கு 43% ஆக உயர்த்த பரிந்துரை செய்துள்ளார்.  உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு சேர்த்தால் மொத்தம் 75 % இட ஒதுக்கீடு அதிகரிக்கும் என தகவல் வெளியாகிறது.