திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (11:04 IST)

தீபாவளி பண்டிகைக்கு ஆட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள் !

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல்ஆடுகள் விற்பனையானது.


பல மாவட்டங்களில் இருந்து ஆடு வளர்ப்போர் வாங்குபவர்கள் பலர் சந்தையில் குவிந்தனர். வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே வார சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த வார சந்தையில், தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

நேற்று இரவு முதல் மழை  பெய்து வந்த நிலையில்,மழையை கூட பொருட்படுத்தாமல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு ஆட்டு வகைகள் இங்கே கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது.

அதிகாலை 3 மணி முதல் ஆட்டு வியாபாரிகள் மற்றும் ஆடுகளை வாங்குபவர்கள்  ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆடு ஒன்று 6000 முதல் 10 ஆயிரம் வரை விலை போனதால், விவசாயிகள்  மற்றும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்,இந்த வார சந்தையில் ஆடுகள் மட்டுமின்றி,கோழி, சேவல் மற்றும் மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொட்டும் மழையிலும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வேன்களிலும், கால்நடையாகவும் அழைத்துச் சென்றனர்.