மைக் கிடைச்சா என்ன வேணா பேசுவீங்களா!. ஆ.ராசா மீது கேஸ் போட்டது சரிதான்!.. திமுகவை கடுப்பாக்கிய பிரேமலதா!...
சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் திமுக ஊழல் செய்திருப்பதாக கூறியிருப்பதாக பேசியிருந்தார். மேலும் மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவர் காட்டிய உடல் மொழி திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அதோடு அப்போது பேசிய அமைச்சர் சிடி நிர்மல் குமார் மிசா காலத்தில் கொலை, வழிப்பறி, பெண்கள் தொடர்பான புகார்கள் என பல வழக்குகளில் பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மிசாவில் கைது செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என கூறினார். இதுவும் திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது..
இதையடுத்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என ஒருவர் சொல்கிறார்.. அவரின் பிறப்பின் மீது நான் சந்தேகப்படுகிறேன்.. அவர் யாருக்கு பிறந்தார்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து ஆ.ராசா மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் இல்லை.. பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான்.. அதற்கு எனது கண்டனங்கள்.. மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக வாய்க்கு வந்தபடி எதைவேண்டுமானாலும் பேசக்கூடாது.. அவர் மீது வழக்குப் பதிவு செய்தது சரியான முடிவுதான் என கூறியிருக்கிறார். திமுகவின் கூட்டணியில் தேமுதிக இருக்கும் நிலையில் பிரேமலதாவின் இந்த கருத்து திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.