விஜய் சேதுபதிக்கு கட்டம் சரியில்ல!. தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேட்டி..
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசுவிட்டு பொறுப்பு, பிரச்சனை என வரும் போது பழியைதூக்கி எதிரணியின் மீது போட்டுவிட்டு ஓடுவது என்பது ஒரு தலைமை பண்புக்கு அழகில்லை.. அது ஏமாற்றும் வேலை என கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளும் அணி, எதிர் அணி என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு அது தொடர்பாக போட்டியாளர்களிடம் பேசும்போதுதான் விஜய் சேதுபதி அப்படி ஒரு கருத்தை தெரிவித்தார். ஆனால் அவர் ஆளும் தவெக அரசையும், முதல்வர் ஜோசப் விஜயையும்தான் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் என தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் கோபப்பட்டனர். இதையடுத்து விஜய் சேதுபதி எந்த உள் நோக்கத்திலும் அப்படி பேசவில்லை என விஜய் டிவி நிர்வாகமும் விளக்கமளித்தது. ஆனாலும், தவெகவினர் அதை ஏற்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் விஜய் சேதுபதி மாற்று கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இப்படி பேசுகிறார்.. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வேலையை செய்கிறார்.. அவருக்கு கட்டம் சரியில்லை.. எங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு கூட பேச சொல்லுங்கள்.. பொதுமக்களை அவருக்கு பதில் கொடுப்பார்கள்; எனக் கூறியிருக்கிறார்.