வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:09 IST)

மகாதீப மலையில் மீண்டும் மண்சரிவு ஏற்படலாம்?? மலை ஏற தடையா? - ஐஐடி நிபுணர்கள் எச்சரிக்கை!

Thiruvannamalai

திருவண்ணாமலையில் அடுத்த வாரம் கார்த்திகை மகாதீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மழை காரணமாக மண் சரிவு ஏற்படலாம் என ஐஐடி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

வங்க கடலில் உருவான ஃபெங்கல் புயல் சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் 7 பேர் பலியானார்கள். மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி நிபுணர்கள் நிலம், மண் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 

அதை தொடர்ந்து திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் லேசான மழையால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ள அவர்கள், மண் சரிவு குறித்த ஆய்வு அறிக்கையை அரசிடம் விரைவில் சமர்ப்பிப்போம் என கூறியுள்ளனர்.
 

 

வரும் 13ம் தேதியன்று திருக்கார்த்தை மகாதீபம் மலை மீது ஏற்றப்பட உள்ளது. வழக்கமாக இந்த மகாதீப நாளில் பலரும் மகாதீப மலை ஏறுவது வழக்கம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஐஐடி நிபுணர்களின் அறிக்கையை பொறுத்தே இந்த ஆண்டு பக்தர்கள் மலையேற அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K