1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 மே 2025 (15:11 IST)

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

Nainar Nagendran
திருப்பூரில் "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றி விழா நடந்த போது, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை இரண்டு போலீஸ்காரர்கள் சந்தித்த நிலையில், அவர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி மற்றும்  ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, திருப்பூரில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சின்னச்சாமி மற்றும் மந்திரம் ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து இருவரையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அழைத்து, பணியிட மாற்றம் செய்து திருப்பூர் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அதேபோல், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த நல்லசாமி என்பவர், பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாஜக தலைவர் சந்தித்ததற்காக இரண்டு போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva