1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 18 மே 2025 (16:05 IST)

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

vijay-bussy anand
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரி ழந்த ஈழத் தமிழர்களை நினைவு கூறும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் தங்கள் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் தினம் அனுசரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட வேண்டிய கோஷங்களும் கட்சித் தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran