டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு நடிகை கங்கனா ட்விட் செய்த நிலையில், அந்த ட்விட்டை அவர் உடனடியாக நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை கங்கனா தனது ட்விட்டரில், “டிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டும் தான், ஆனால் மோடி உலகத் தலைவர்” என்று பதிவு செய்திருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று ட்ரம்ப் கூறியதை அடுத்து, கங்கனா இந்த விமர்சனத்தை செய்தார். இந்த நிலையில், ஜே.பி. நட்டாவின் அறிவுரைக்கு ஏற்ப அந்த ட்விட்டை டெலீட் செய்துவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னுடைய தனிப்பட்ட கருத்தை மட்டுமே பதிவிட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பாஜக எம்.பி ஒருவர் ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக பாஜக தலைமை தலையிட்டு, அந்த ட்விட்டை நீக்க உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva