1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 மே 2025 (12:48 IST)

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

Seeman

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அதில் சீமான் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. ஆங்காங்கே கட்சி பொதுக்கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பு கூடியுள்ளது. தேர்தல் கூட்டணியில் முதலாவதாக பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. திமுகவை வீழ்த்த சக்தி வாய்ந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில் இந்த கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை சீமான் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. பொதுவாக தனித்து போட்டியிடும் நாதக இந்த தேர்தலையும் அவ்வாறே சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் நாளை மறுநாள் கோவையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது குறித்தும், தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K