தொடர் தோல்வி.. வெட்கமாத்தான் இருக்கு!.. சீமான் பேட்டி...
சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் சீமானும் ஒருவர். 15 வருடங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். மேலும், அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கும் எதிராக பேசிய சீமான் தமிழ் தேசியத்தை கையில் எடுத்தார்.
இதையடுத்து திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்பியவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் சீமான் 30 லட்சம் வாக்குகளை பெற்றார். ஆனால் நடிகர் விஜயின் வருகையால் சீமானின் வாக்குப்பதிவு கீழே போனது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. அதோடு காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வி அடைந்தார். அதோடு தாராபுரம், மதுராந்தகம் இரண்டு இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்திற்கு சென்ற சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது என் சொந்த ஊருக்குள் வர எனக்கு வெக்கமாகத்தான் இருக்கிறது.. படித்து படித்து சொன்னேன்.. எல்லா இடங்களிலும் கத்தினேன்.. போராட்டங்களில் முன் நின்றேன். ஆனால் என்னை தோற்கடித்தார்கள். இன்றைக்கு இல்லையென்றாலும் என்ன!.. நாளைக்கு இது கண்டிப்பாக சரி செய்வோம் என பேசியிருக்கிறார்.