1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nainar nagendiran reply to the troll

என்னது புடவையா?.. கொச்சைப்படுத்தாதீங்க ப்ளீஸ்!.. நயினார் நாகேந்திரன் ரியாக்சன்..

nainar vijay
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின் முதன் முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். அப்போது முதலமைச்சர் விஜய், பாஜக தலைவர் நயினர் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் தனித்தனியாக அவரை வரவேற்றனர்.

சுமார் 750 கோடி செலவில் சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜயும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது மரியாதை நிமித்தமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்தார்.

ஆனால் அந்த சால்வை மிகவும் பெரிதாக இருந்தால் பார்ப்பதற்கு புடவை போல இருந்தது. இதையடுத்து விஜயி பிடிக்காதவர்கள் நயினார் நாகேந்திரன் விஜய்க்கு சால்வைக்கு பதில் புடவை அணிவித்திருக்கிறார் என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் ‘அதை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள்.. அவர் நமது முதலமைச்சர்.. ஒரு கட்சித் தலைவராக நான் அவருக்கு மரியாதை செலுத்தினேன்’ எனக் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு!.. தலைமை செயலகத்தில் பரபரப்பு...