திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:26 IST)

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு..!

ஆயுத பூஜை விடுமுறை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இன்று கிளம்புகின்றனர். 
 
இதனை அடுத்து இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி குரூப்பில் கூறியிருப்பதாவது
 
 
ஆயுத பூஜை (அக்.23), சரஸ்வதி பூஜை (அக்.24) என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, வரும் வெள்ளிக்கிழமை (அக்.20), சனிக்கிழமை (அக்.21) ஆகிய நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரை கூடுதல் சேவை வழங்கப்பட உள்ளது.
 
 
அதாவது, இரவு 8 மணி முதல் 10 மணிவரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டுவழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்குபதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும்சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva