1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 மே 2025 (08:46 IST)

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகளின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வு எழுதுபவர்கள் இந்த தேதியில் தேர்வு எழுத ஆயத்தமாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக மே 9 முதல் 14 வரை நடைபெறவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம்  அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இது குறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி கூறியபோது: "நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, சிஏ தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து தகவல்களை பார்வையிடலாம்" என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் மே 16ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 16ஆம் தேதி சிஏ தேர்வுகள் ஆரம்பம் ஆவதால் இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva