திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (10:28 IST)

நீர் மோர் பந்தல், அன்னதான கூடங்கள் அமைக்க சான்றிதழ் பெற வேண்டும்: அதிரடி உத்தரவு..!

மதுரை சித்திரை திருவிழாவில் நீர் மோர் பந்தல், அன்னதான கூடங்கள் அமைக்க உணவுப்பாதுகாப்புத்துறையின் சான்றிதழ் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் சென்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி அல்லது பதிவுச் சீட்டு சான்றிதழை பெற வேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாமல் பிரசாதங்கள் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிலையில்  அவர்களுக்கு தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல், மோர் பந்தல் மற்றும் அன்னதான உணவு கூடங்கள் அமைக்கப்படும். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு மோர் பந்தல் அன்னதான கூடங்கள் அமைக்க கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாமல் பிரசாதம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran