திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (11:52 IST)

தமிழக கோயில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு.!

கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து தமிழக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் கொடுக்கும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் உள்ள 48 முதல் நிலை கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படும் என சற்று முன் பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் 
 
இந்த நீர்மோர் வழங்கும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கோவிலில் உள்ள கருங்கல் பதிக்கப்பட்ட தரை உள்ள இடங்களில் தரை விரிப்பு போடும் திட்டத்தையும் அறநிலைத்துறை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பக்தர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழக அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva