வெள்ளி, 17 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (09:04 IST)

ஹிண்டென்பெர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு! - அதானி வேதனை!

Adaani

முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டென்பெர்கின் குற்றச்சாட்டால் பல லட்சம் கோடிகளை இழந்ததாக கௌதம் அதானி கூறியுள்ளார்.

 

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டென்பெர்க், இந்திய கார்ப்பரேட் நிறுவனமான அதானி பங்கு மதிப்பை உயர்த்த முறைகேட்டில் ஈடுபட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் வேகமாக சரிவை நோக்கி பாய்ந்தது.

 

அதன்பின்னர் ஹிண்டென்பேர்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என SEBI அறிவித்த பின்னர் அதானியின் பங்கு மதிப்புகள் மீண்டும் வேகமாக உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதானி, ஹிண்டென்பெர்க் அறிக்கையால் தனது குழுமம் ரூ.8.8 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இது பொய்யை ஆயுதமாக பயன்படுத்தியதன் விளைவு என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K