1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court cancelled cm joseph vijay application

பெரம்பர் தொகுதி வெற்றி தொடர்பான வழக்கு!.. முதல்வர் விஜயின் மனு தள்ளுபடி..

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைத்தார்.

முதல்வர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார்

இந்நிலையில், சொத்து விவரங்களை மறைத்து விஜய் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்குமாறு  சென்னை பெரம்பூர் தொகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நிராகரிக்குமாறு விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் முதலமைச்சர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். மேலும், விஜயின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எக்மோர் வேண்டாம், சென்னை எழும்பூர் என அழையுங்கள்! - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்