1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actress abirami support protests against neet exam

என் குழந்தையாக இருந்தால்!. டெல்லி நீட் தேர்வுக்கு அபிராமி ஆதரவு!..

abirami
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா தளம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லி போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுவது, தடியடி நடத்துவது, கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பிரதமரில் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்..

தமிழ்நாட்டில் கூட சில இடங்களில் நீட் தேர்வி ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை அபிராமி ‘ஜந்தர் மந்திரில் நடப்பது பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. பல வருடங்கள் படித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் குரலுக்கு  தடியடியே பதிலாக கிடைத்துள்ளது.. ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்?.. உள்ளூர் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.. அனைவரும் தனது குரலை ஒலிக்க செய்யுங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... બધા વાંચો
அடுத்த கட்டுரையில்
ரயில் கட்டணங்களில் 3% தள்ளுபடி.. ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு.. யார் யார்க்கு பொருந்தும்?