சிறுமிகள் முன்பு ஆபாச செய்கை!.. கும்கி பட நடிகருக்கு ஒரு வருட சிறை!..
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீஜித் ரவி. பெரும்பாலும் வில்லனாகவே அவர் நடித்திருக்கிறார். 2005ம் வருடம் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ஸ்ரீஜித் ரவி தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் கும்கி, வேட்டை, மதயானை கூட்டம், கதகளி, ஆயிரத்தில் இருவர், அசுரவதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் சிறுமிகள் முன்பு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீஜித் ரவிக்கு ஒரு வருடம் கடுங்காமல் தண்டனை விதித்து திருச்சூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
கடந்த 2022ம் வருடம் திருச்சூரில் உள்ள ஒரு பூங்காவில் இரண்டு சிறுமிகள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டதாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு 50,000 அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறை தண்டனை என அறிவித்ததுள்லது.
மேலும், மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.