வியாழன், 25 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2025 (12:55 IST)

சென்னையில் அழுக்கு கேனில் தண்ணீர் விற்றால் அபராதம்! குடிநீர் ஆலைகளில் ஆய்வு! - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

Chennai Can Water

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படும் குடிநீர் ஆலைகளில் தர ஆய்வை மெற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மக்களின் குடிநீர் தேவைகள் பெரும்பாலும் தனியார் குடிநீர் கேன்கள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகின்றன. அனைத்து தெருக்களில் கேன் தண்ணீரை வாங்கி விற்கும் கடைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தண்ணீர் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் இந்த கேன்கள் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு பிறகு மறுசுழற்சிக்கு அனுப்பபட வேண்டும்.

 

ஆனால் சில நிறுவனங்களில் ஆண்டுக்கணக்கில் அழுக்கான தண்ணீர் கேன்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தண்ணீர் வாங்கி குடிக்கும் மக்கள் சுகாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது.

 

இந்நிலையில் உணவுப்பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆழைகளை பெருநகர குடிநீர் வழங்கல் துறை குழுவாக இணைந்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தண்ணீர் கேன்களில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும் என்றும், பழைய அழுக்கு கேன்களை பயன்படுத்தும் நிறுவனங்கள், விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K