1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 மே 2025 (11:40 IST)

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கிகளில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்-க்களில் பணம் வருவது போன்று, குடிநீர் ஏ.டி.எம்-க்களில் காசு போட்டால் வாட்டர் பாட்டில்கள் வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், முதல் கட்டமாக 50 குடிநீர் ஏ.டி.எம்-க்கள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் விரைவில் தொடங்கி வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதில், 150 மில்லி,   மற்றும் ஒரு லிட்டர் என 2 வகைகளில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளும் வகையிலும் இந்த ஏ.டி.எம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த குடிநீர் ஏ.டி.எம்-க்கள் திட்டம் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran